மாவட்ட செய்திகள்

தியாகதுருகம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு + "||" + Near Thyagarathuram Fallen worker died in the well

தியாகதுருகம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

தியாகதுருகம் அருகே
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
தியாகதுருகம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி, 

தியாகதுருகம் அருகே முடியநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் பிணமாக மிதந்தவரின் உடலை கைப்பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் வேங்கைவாடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி காமராஜ்(வயது 55) என்பது தெரியவந்தது. மேலும் இவர் முடியநல்லூர் கிராமத்தை சேர்ந்த இளையாப்பிள்ளை என்பவரது நிலத்தில் கூலி வேலை பார்க்க வந்ததும், கிணற்றுக்கு அருகே நடந்து சென்றபோது தவறி விழுந்து இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காமராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பதனீர் எடுக்க ஏறியபோது மாரடைப்பு பனை மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி
சாமல்பட்டி அருகே பனை மரத்தில் பதனீர் எடுப்பதற்காக தொழிலாளி ஏறிய போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இதனால் அவர் மரத்தில் பிணமாக தொங்கியது பார்க்க பரிதாபமாக இருந்தது.
2. உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி மர்ம சாவு - போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ஓசூரில் லிப்ட்டில் அடிபட்டு தொழிலாளி சாவு பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்
ஓசூரில் லிப்ட்டில் அடிபட்டு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4. நாகர்கோவில் அருகே எந்திரத்தில் தலை சிக்கி தொழிலாளி சாவு
நாகர்கோவில் அருகே வலை கம்பெனி எந்திரத்தில் தலை சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
5. உழவுப்பணியின் போது எந்திரத்தில் அடிபட்ட தொழிலாளி சாவு
தஞ்சையில் உழவுப்பணியின் போது எந்திரத்தில் அடிபட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.