சாத்தான்குளம் ஆட்டோ டிரைவர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது


சாத்தான்குளம் ஆட்டோ டிரைவர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது
x
தினத்தந்தி 13 Jan 2019 3:45 AM IST (Updated: 12 Jan 2019 11:54 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் ஆட்டோ டிரைவர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

சாத்தான்குளம், 

சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி மகன் மணிகண்டன் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவரை கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தசரா திருவிழா வரவு செலவு கணக்கு கேட்டது தொடர்பாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த செல்லப்பா, இசக்கிமுத்து, கிங்ஸ்டன் ஜெயசிங், சுதர்சன் வினோத் என்ற சாம் ஆகிய 4 பேரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர்.

மணிகண்டன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சாத்தான்குளம் ரஸ்தா தெருவைச் சேர்ந்த மந்திரம் மகன் ஆட்டோ டிரைவரான மற்றொரு மணிகண்டனை (27) போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்து, சாத்தான்குளம் அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story