ஸ்ரீபெரும்புதூர் அருகே இரு சக்கர வாகனத்தில் ரூ.4 லட்சம் திருட்டு


ஸ்ரீபெரும்புதூர் அருகே இரு சக்கர வாகனத்தில் ரூ.4 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 13 Jan 2019 3:45 AM IST (Updated: 13 Jan 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் ரூ.4 லட்சம் திருடப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்,

திருவள்ளூர் மாவட்டம் உக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50). இவர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செட்டிப்பேடு பகுதியில் ரப்பர் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தனது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள வங்கியில் ரூ.12 லட்சம் எடுத்து தனது இரு சக்கரவாகனத்தின் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் வைத்துவிட்டு செட்டிப்பேடு பகுதியில் உள்ள தனது தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

செட்டிப்பேடு பகுதியில் உள்ள டீ கடையில் ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் தொழிற்சாலைக்கு சென்ற வெங்கடேசன் பணத்தை எண்ணி பார்த்தபோது ரூ.4 லட்சம் குறைவாக இருந்தது.

திருட்டு

இதுகுறித்து வெங்கடேசன் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனம் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர்

இதில் மர்ம நபர்கள் இருவர் வெங்கடேசனின் இருசக்கர வாகனத்தின் இருக்கையை தூக்கி ரூ.4 லட்சத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story