மாவட்ட செய்திகள்

தறிகெட்டு ஓடிய ஷேர்ஆட்டோ மோதிய விபத்தில்போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி சாவு + "||" + A policeman Treatment Fruitless Death

தறிகெட்டு ஓடிய ஷேர்ஆட்டோ மோதிய விபத்தில்போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி சாவு

தறிகெட்டு ஓடிய ஷேர்ஆட்டோ மோதிய விபத்தில்போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி சாவு
தறிகெட்டு ஓடிய ஷேர்ஆட்டோ மோதிய விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவொற்றியூர்,

மணலியில் இருந்து நேற்று முன்தினம் மாலை திருவொற்றியூர் நோக்கி வந்த ஷேர் ஆட்டோ ஒன்று, மணலி சி.பி.சி.எல். தொழிற்சாலை அருகே வந்தபோது திடீரென தறிகெட்டு ஓடி எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளி விட்டு நின் றது. இதில் ஆட்டோ நொறுங்கியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக வேலை பார்த்து வரும் கருப்பசாமி (வயது 40), மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சி.பி.சி.எல் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பிரபு (38), தனம்(40), ஆட்டோ டிரைவர் முத்து (24), அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர் நவீன் (20), கோபிநாத் (42) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர்.

போலீஸ்காரர் பலி

அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தலையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த போலீஸ்காரர் கருப்பசாமி, நேற்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பலியான கருப்பசாமிக்கு சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். கடந்த மாதம்தான் இங்கு மாற்றுதலாகி வந்தார். அவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், பொன்மகள் (2) என்ற மகளும் உள்ளனர்.

இது குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.