பழனி அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்ட பொன்னிஸ் தங்கும் விடுதி முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்


பழனி அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்ட பொன்னிஸ் தங்கும் விடுதி முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 14 Jan 2019 4:00 AM IST (Updated: 13 Jan 2019 11:27 PM IST)
t-max-icont-min-icon

பழனியில் புதிதாக கட்டப்பட்ட பொன்னிஸ் தங்கும் விடுதியை முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார்.

பழனி,

பழனி அடிவாரம் இடும்பன்மலை அருகில் புதிதாக பொன்னிஸ் என்ற பெயரில் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு பழனி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில் குமார் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ.வு மான அர.சக்கரபாணி முன்னிலை வகித்தார்.

தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. ரிப்பன்வெட்டி தங்கும் விடுதியை திறந்து வைத்தார். அதையடுத்து விடுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள், வாடிக்கையாளருக்கான அறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம், மடத்துகுளம் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், கந்தவிலாஸ் செல்வகுமார், கண்பத்கிராண்ட் ஹரிகரமுத்து, வணிகவரித்துறை இணை ஆணையர் தேவந்திரபூபதி, முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் ராஜமாணிக்கம், பழனி நகராட்சி ஆணையர் நாராயணன், ஜெயம் லாட்ஜ் ஜே.பி. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் புளியம்பட்டி பொன்ராஜ், காணியாளர் நரேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள், ராஜேந்திரன், சுரேஷ், முருகானந்தம், சுந்தர், வி.ஏ.பி. குமார் மற்றும் ஏராளமான நகர முக்கிய பிரமுகர்கள், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி முன்னாள் நகர்மன்ற தலைவர் வேலுமணி மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Next Story