மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் + "||" + By the end of the vacation Tourist places in Kodaikanal

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளிரான காலநிலை நிலவி வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளே அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

அதன்படி நேற்றும் அதிகாலையில் இருந்தே 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். இதனால் நகரின் முக்கிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக முக்கிய சாலைகளை ஒருவழிப்பாதையாக மாற்றினர். இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது.

போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருந்தாலும், சுற்றுலா இடங்களை பார்வையிட வந்தவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விளையாடி பொழுதை கழித்தனர். அத்துடன் மலைகளுக்கு இடையே தரையிறங்கும் மேகக்கூட்டங்களைபார்த்து ரசித்தும், கொட்டும் பனியில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் தங்கும் விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விடுதி உரிமையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கிடு,கிடு பள்ளத்தில் கவிழ்ந்த கார் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்
குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கிடு,கிடு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
2. காணும் பொங்கலையொட்டி பாஞ்சாலங்குறிச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
காணும் பொங்கலையொட்டி பாஞ்சாலங்குறிச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
3. ஆபத்தை உணராமல் வனவிலங்குகளுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஆபத்தை உணராமல் வனவிலங்குகளுடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
4. சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டியில் ஹேப்பி சாலை அமலுக்கு வந்தது
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்காக ‘ஹேப்பி‘ சாலை அமலுக்கு வந்தது.
5. ஆங்கில புத்தாண்டையொட்டி திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்; பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.