மாவட்ட செய்திகள்

தென்திருப்பேரையில்மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது + "||" + In tentirupperai The gold chain was arrested by the foreman

தென்திருப்பேரையில்மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது

தென்திருப்பேரையில்மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது
தென்திருப்பேரையில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
தென்திருப்பேரை, 

தென்திருப்பேரை மாவடிபண்ணையைச் சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி ஜெயராதாதேவி (வயது 70). இவர் கடந்த 9-ந் தேதி காலையில் தனது வீட்டில் இருந்து நெல்லை மெயின் ரோட்டில் உள்ள எடை நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென்று ஜெயராதாதேவி கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் எடையுள்ள 2 தங்க சங்கிலிகளை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் படத்தை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் சிவகளையை சேர்ந்த முத்துகுமார் (36) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் முத்துகுமாரை நேற்று முன்தினம் இரவில் ஆழ்வார்திருநகரி அருகே காடுவெட்டி பகுதியில் உள்ள பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த போது கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி மற்றும் ஜெயராதாதேவியிடம் இருந்து பறித்துச் சென்ற தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டன.