தமிழக சுங்கச்சாவடிகளில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலை தரக்கூடாது பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்


தமிழக சுங்கச்சாவடிகளில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலை தரக்கூடாது பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jan 2019 11:15 PM GMT (Updated: 13 Jan 2019 10:08 PM GMT)

தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் கூட்டமைப்பின் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவி மாநாட்டின் நோக்கம் பற்றி பேசினார்.

திருச்சி,

மாநாட்டில், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் தமிழக தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை தரவேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலை தரக்கூடாது. சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.26 ஆயிரம் வழங்கவேண்டும். வருட கணக்கில் வேலை செய்யும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

ஆண்டுதோறும் புதுப்புது ஒப்பந்ததாரர்களை நியமித்து தொழிலாளர்களின் பணி நிரந்தர உரிமையை நீர்த்து போகச்செய்யும் நடவடிக்கைகளை ரத்து செய்யவேண்டும். தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்ற தொழிலாளர் நலத்திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story