மாவட்ட செய்திகள்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Hindu Frontiers demonstrated

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சபரி மலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரள முதல்வரை கண்டித்தும் இந்து முன்னணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜெயங்கொண்டம்,

இந்து முன்னணியினர் சார்பில் சபரி மலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேரள முதல்வரை கண்டித்தும் ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட துணை தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமபாலமுருகன், மாவட்ட செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி கோட்ட செயலாளர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக மாவட்ட துணை தலைவர் ஜோதிடர் பழனிச்சாமி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் ராஜா நன்றி கூறினார்.


ஆசிரியரின் தேர்வுகள்...