மாவட்ட செய்திகள்

சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி + "||" + The student drowned in the river

சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
சாத்தூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
சாத்தூர்,

சாத்தூர் அருகே ஒ.மேட்டுபட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுப்புராஜ்(வயது 16). ஒ.மேட்டுபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தாத்தா சுந்தர்ராஜனுடன்(60) ஆடுகளை குளிப்பாட்ட சங்கர்நத்தம் தடுப்பணை அருகில் உள்ள வைப்பாற்றுக்கு சென்றார்.


இவர்களுடன் அதே கிராமத்தை சேர்ந்த முனியராஜ்(13) என்பவனும் சென்றான். அங்கு ஆடுகளை குளிப்பாட்டி விட்டு சுப்புராஜ் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் அவர் நீரில் மூழ்கினார்.

இதை பார்த்து கரையில் நின்ற முனியராஜ் கூச்சல் போட்டான். இதைதொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சுப்புராஜை ஆற்றில் இறங்கி தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ஆழமான பகுதியில் இருந்து சுப்புராஜை பிணமாக மீட்டனர். மேலும் தகவல் அறிந்து வந்த சாத்தூர் டவுன் போலீசார் சுப்புராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடன் தொல்லை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை
பல்லடத்தில் கடன் தொல்லை காரணமாக பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
2. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
தேர்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3. வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார்
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் புகார் மனு கொடுத்தார்.
4. திருப்பரங்குன்றம் அருகே உயர் மின் கோபுரத்தில் ஏறி பெயிண்டர் தற்கொலை மிரட்டல்
திருப்பரங்குன்றம் அருகே தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் மின் கோபுரத்தில் ஏறி நின்று வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5. முத்தியால்பேட்டையில் கழிவுநீர் வாய்க்காலில் வாலிபர் பிணம், போலீஸ் விசாரணை
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.