மாவட்ட செய்திகள்

‘சிவசேனாவை தோற்கடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை’ அமித்ஷாவுக்கு, உத்தவ் தாக்கரே பதிலடி + "||" + Defeat the Shiv Sena None of them were not born For Amit Shah, Uddhav Thackeray is the answer

‘சிவசேனாவை தோற்கடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை’ அமித்ஷாவுக்கு, உத்தவ் தாக்கரே பதிலடி

‘சிவசேனாவை தோற்கடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை’ அமித்ஷாவுக்கு, உத்தவ் தாக்கரே பதிலடி
அமித்ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘சிவசேனாவை தோற்கடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை’ என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, சமீபத்தில் மராட்டியத்தில் நடைபெற்ற தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில் “சிவசேனா எங்கள் கூட்டணியில் இணைந்தால் அவர்களுடன் சேர்ந்து கூட்டணியாக வெற்றி பெறுவோம். இல்லை எனில் எதிர்க்கட்சிகளுடன் சேர்த்து அவர்களையும் தோற்கடிப்போம்” என பா.ஜனதா நிர்வாகிகளிடம் கூறினார்.


இந்தநிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மும்பை ஒர்லி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

சமீபத்தில் நான், யாரோ நம்மை தோற்கடிப்போம் என்று கூறிய வார்த்தையை கேட்டேன். சிவசேனாவை தோற்கடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை. மக்களின் நம்பிக்கையை இழப்பவர்கள் எந்த போரிலும் வெற்றி பெறமுடியாது. உங்கள்(பா.ஜனதா) மீது கொண்ட நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். அவர்கள் உங்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவார்கள்.

சிலர் தேர்தலுக்காக மட்டுமே அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுப்பதை சுட்டிக்காட்டவே, நான் அந்த பிரச்சினையை கையில் எடுத்தேன். 2014-ம் ஆண்டுக்கு பின் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத காங்கிரஸ் கட்சி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுப்பதாக நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்.

கடவுள் அனுமனின் சாதி குறித்து பேசும் தலைவர்கள் கூட உங்களிடம் இருக்கிறார்கள். இதேபோல் வேறு ஏதாவது மதத்தில் நடந்திருந்தால் மக்கள் அவர்களின் பற்களை உடைத்திருப்பார்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உண்மையிலேயே உதவ வேண்டும் என்கிற எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தால் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு அளித்திருக்கவேண்டும், பின்னர் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை