கிருஷ்ணகிரியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்


கிருஷ்ணகிரியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:00 PM GMT (Updated: 14 Jan 2019 6:24 PM GMT)

கிருஷ்ணகிரி நகரில் பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைகள், கோழி இறைச்சிகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடாகவும் காணப்படுகிறது.

இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களும் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறந்து வந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story