மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா + "||" + ADMK On behalf of Equality Pongal Festival

அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா

அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா
செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில் அ.தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
செங்கல்பட்டு,

விழாவுக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கவுஸ்பாஷா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் அப்பாதுரை(மதுராந்தகம்), விஜயரங்கன் (திருக்கழுக்குன்றம்), சுப்பிரமணி (அச்சரப்பாக்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் கே.ஆறுமுகம், கே.என்.ராமச்சந்திரன் எம்.பி., மரகதம் குமரவேல் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், ராஜி ஆகியோர் கலந்துகொண்டு மண் பானையில் பொங்கல் வைத்து, அவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.சல்குரு(ஆலப்பாக்கம்), குணசேகரன்(செட்டிபுண்ணியம்), எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட இணை செயலாளர் திம்மாவரம் வக்கீல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...