பாலமேடு அருகே வீட்டின் கான்கிரீட் கூரை விழுந்து தொழிலாளி பலி


பாலமேடு அருகே வீட்டின் கான்கிரீட் கூரை விழுந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 Jan 2019 4:00 AM IST (Updated: 15 Jan 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வீட்டின் கான்கிரீட் கூரை விழுந்து தொழிலாளி பலியானார்.

அலங்காநல்லூர்,

பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரமேசுவரன் (வயது 27). கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டினுள் அவர் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கான்கிரீட் மேற்கூரை திடீரென்று இடிந்து, உள்ளே படுத்திருந்த பரமேசுவரன் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

 அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரமேசுவரன் பரிதாபமாக இறந்துபோனார்.

 இதுகுறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன பரமேசுவரனுக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story