அந்தூர் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா


அந்தூர் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 15 Jan 2019 3:30 AM IST (Updated: 15 Jan 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அந்தூர் செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

பெரம்பலூர்,

விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் பி.சேது தலைமை வகித்தார். பள்ளி மேலாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். அனைவரையும் பள்ளி துணை முதல்வர் நாகராஜ் வரவேற்றார்.

விழாவில் காலை சமத்துவ பொங்கல் வைத்து படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பானை உடைத்தல், கோலப் போட்டி, கலை நிகழ்ச்சியும் நடந்தது. அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு ஓட்ட பந்தயம், தொடர் ஓட்டம், வாலிபால், கோ கோ, கபடி குண்டு எறிதல் ,ஈட்டி எறிதல், வட்டு எறிதல், கிரிக்கெட் ஆகிய போட்டிகளும் நடந்தது. அதனையொட்டி பரிசளிப்பு விழாவும் நடந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் சேது பரிசுகளை வழங்கினார். விழாவில் ஒட்டு மொத்த புள்ளிகளை பெற்ற ஜாஸ்மின் அணிக்கு கேடயம் வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளியின் முன்னாள் முதல்வர் செந்தமிழ் செல்வி, அந்தூர் கிராம முக்கியஸ்தர்கள் பொன்னு சாமி, அன்னலட்சுமி ஆகி யோர் உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story