தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்


தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 Jan 2019 10:00 PM GMT (Updated: 16 Jan 2019 12:40 PM GMT)

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி, 

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளர் நெல்லை மஜித், மாநில துணை செயலாளர் முகம்மது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இக்பால் வரவேற்றார்.

கூட்டத்தில், பிப்ரவரி 16–ந் தேதி மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் நெல்லை மேற்கு மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது.

தனி மாவட்டம்

கடையநல்லூர் நகரில் வார்டு 10 முதல் 20 வரை உள்ள இக்பால் நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை நகர பகுதியிலேயே அமைக்க அரசை கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முஸ்லிம் யூத் லீக் மாநில துணை தலைவர் செய்யது பட்டாணி, மாவட்ட இளைஞர் லீக் தலைவர் நவாஸ்கான், செயற்குழு உறுப்பினர் அக்பர், தலைமை நிலைய பேச்சாளர் முகம்மது அலி, தென்காசி நகர நிர்வாகிகள் அபுபக்கர், முகம்மது உசேன், புளியங்குடி அப்துல் வகாப், சாகுல் அமீது, அப்துல் லத்தீப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராகிம் நன்றி கூறினார்.


Next Story