காணும் பொங்கலையொட்டி நெல்லை அறிவியல் மையத்தில் குவிந்த பொதுமக்கள்


காணும் பொங்கலையொட்டி நெல்லை அறிவியல் மையத்தில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Jan 2019 3:30 AM IST (Updated: 16 Jan 2019 7:22 PM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி நெல்லை அறிவியல் மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

நெல்லை, 

காணும் பொங்கலையொட்டி நெல்லை அறிவியல் மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

காணும் பொங்கல் 

நெல்லை மாவட்டத்தில் பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு மறுநாள் மாட்டு பொங்கல், கரிநாள் மற்றும் காணும் பொங்கலாக கொண்டாடப்படுவது வழக்கம். காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தோடு சென்று வருகிறார்கள்.

இதனால் நேற்று நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பாபநாசம் காரையாறு, முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதி, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி, குற்றாலம், அடவிநயினார் அணை, ராமநதி, களக்காடு தலையணை, தேங்காய் ஊருளி அருவி, அச்சன்கோவில் செல்கின்ற பாதையில் உள்ள கோட்டை கருப்பசாமி கோவில் வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றனர்.

அறிவியல் மையத்தில் 

நெல்லை மாநகர பகுதியில் உள்ள மக்கள் காணும் பொங்கலையொட்டி அறிவியல் மையத்தில் குவிந்தனர். அங்கு பொது மக்களின் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் அறிவியல் மையத்திற்கு வந்து இருந்தனர். வீட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி வீட்டில் சமைத்த உணவை அறிவியல் மையத்திற்கு கொண்டு வந்து சாப்பிட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலிலும் பொது மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இறைச்சி கடைகள் 

காணும் பொங்கலையொட்டி மக்கள் இறைச்சி சாப்பிடுவது வழக்கம். இதனால் நேற்று நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட், மேலப்பாளையம், நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளையங்கோட்டையில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.650–க்கும், பிராய்லர் கோழி உயிருடன் கிலோ ரூ.120–க்கும், உரித்தது கிலோ ரூ.180–க்கும், நாட்டுக் கோழி உயிருடன் கிலோ ரூ.250–க்கும், உரித்தது கிலோ ரூ.350–க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story