மாவட்ட செய்திகள்

திருட்டு சைக்கிளுடன் வந்த வாலிபர் கைது பறிகொடுத்த பெண்ணே மடக்கினார் + "||" + The young man with bicycle theft arrested

திருட்டு சைக்கிளுடன் வந்த வாலிபர் கைது பறிகொடுத்த பெண்ணே மடக்கினார்

திருட்டு சைக்கிளுடன் வந்த வாலிபர் கைது பறிகொடுத்த பெண்ணே மடக்கினார்
இளம்பெண் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச்சென்ற வாலிபர் சில தினங்களுக்கு பின்னர் அதனை ஓட்டிச்சென்றபோது கைது செய்யப்பட்டார். பறிகொடுத்த பெண்ணே அவரை மடக்கினார்.

சிவகாசி,

சிவகாசியில் நடந்துள்ள இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

திருத்தங்கல்– பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி இனியவள் (வயது 26). இவர் தனது சைக்கிளை கடந்த 12–ந்தேதி அங்குள்ள மாரியம்மன்கோவில் அருகில் நிறுத்தி விட்டு சென்று இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது சைக்கிளை காணவில்லை. யாரோ அதனை திடுடிச்சென்று விட்டனர்.

இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிவகாசி காமராஜர் சிலை அருகில் இனியவள் நின்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் சைக்கிளில் வந்தார். இதைப்பார்த்த இனியவள் அது தனது சைக்கிள் என்பதை கண்டுகொண்டார். சுதாரித்துக்கொண்ட அவர் துரிதமாக செயல்பட்டு அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

அவர்களது உதவியுடன் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் முருகன் காலனியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் மாடசாமி (28) என தெரியவந்தது. சைக்கிளை திருடியதாக அவரை போலீசார் கைது செய்து சைக்கிளை மீட்டனர். திருடுபோன சில தினங்களிலேயே சைக்கிள் கிடைத்ததால் இனியவள் மகிழ்ச்சி அடைந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்தாத மணல் திருட்டுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை; அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
மணல் திருட்டுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
2. ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. வெள்ளகோவிலில் விசைத்தறி உரிமையாளர் வீட்டில் நகை– பணம் திருட்டு
வெள்ளகோவிலில் விசைத்தறி உரிமையாளர் வீட்டில் 6 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
4. சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது
மகாராஷ்டிராவில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற மருமகளை பண்ணை வீட்டில் வைத்து கற்பழித்த மாமனார் கைது செய்யப்பட்டார்.
5. முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி கைது
சுவாமிமலை முருகன் கோவிலில் முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்ய முயன்ற ராணுவ அதிகாரி மணக்கோலத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியரின் தேர்வுகள்...