திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுச்சேரி,
திருவள்ளுவர் தினம் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு அமைச்சர் கந்தசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் என்ஜினீயர் தேவதாஸ் மற்றும் பாரதி கண்ணன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி லப்போர்த் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. திருவள்ளுவரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ், நிர்வாகிகள் தைரியநாதன், நடராஜன், சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அவர்கள் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பாரதீய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத்தலைவர்கள் ஏம்பலம் செல்வம், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திராவிடர் கழகத்தினர் மண்டல தலைவர் ராசு தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் புதுவை மண்டல செயலாளர் அறிவழகன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் சடகோபன், பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் பழனி, விலாசினி ராசு, இளங்கோவன், ஆதிநாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை செயலாளர் மூர்த்தி, மாநில துணைத்தலைவர் பாண்டுரங்கன், இணை செயலாளர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தமிழ்மாறன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன், மீனவர் அணி செயலாளர் சுப்ரமணி, இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளுவர் மன்றத்தினர் செயலாளர் ராமலிங்கன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பொருளாளர் அண்ணா.தருமலிங்கம், உறுப்பினர்கள் பராங்குசம், துரை.மாலிறையன், அரங்க விஜயரங்கம், சீனு.தமிழ்நெஞ்சன், வேணு.ஞானமூர்த்தி, தமிழ்ச்செல்வன், இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நாம் தமிழர் கட்சியினர் நெல்லித்தோப்பு சுப்பையா சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் ம.தி.மு.க., தமிழ் அறிஞர்கள், விவசாய சங்கத்தினர் பலரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நோணாங்குப்பத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பா.ம.க. சார்பில் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் கணபதி, இளைஞர் சங்க செயலாளர் சேகர், நிர்வாகக்குழு உறுப்பினர் முருகன், பசுமை தாயகம் துணைச் செயலாளர் ராஜாராம், மண்டல செயலாளர் சிவா, தொழிற்சங்க செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story