போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய 2 டாக்டர்கள் கைது
போலி மருத்துவ சான்றிதழ் வழங்கிய 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியில் உள்ள கிளினிக்கில், காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்காக அவர்களின் உண்மையான உடல் நிலையை பரிசோதனை செய்யாமல் பணம் வாங்கி கொண்டு போலியான மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வழங்கப்படுவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசார் தத்தாத்ரேய நர்சிங் ஹோம் என்ற கிளினிக்கில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 14 ரப்பர் ஸ்டாம்புகள், 11 இன்சூரன்ஸ் காப்பீடு சான்றிதழ்கள், போலி பரிசோதனை சான்றிதழ்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் ராகேஷ் தகல் மற்றும் அந்த கிளினிக்கின் உரிமையாளரான டாக்டர் கிஷோர் சக்பால் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.
Related Tags :
Next Story