நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை,
எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி நெல்லையில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாமறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாயொட்டி, நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள அவரது சிலை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு அ.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் விஜிலாசத்யானந்த் எம்.பி, அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைத்தலைவர் சங்கரலிங்கம், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, நெல்லை கூட்டுறவு பேரங்காடி முன்னாள் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தே.மு.தி.க.மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் தே.மு.தி.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலப்பாளையம் மண்டல அலுவலகம் முன்பு நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவுக்கு முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி, நெல்லை மாநகரில் பல இடங்களில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.