தூத்துக்குடி அருகே பரிதாபம் கண்மாயில் மூழ்கி சலூன் கடைக்காரர் பலி
தூத்துக்குடி அருகே கண்மாயில் மூழ்கி சலூன் கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே கண்மாயில் மூழ்கி சலூன் கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
சலூன் கடைக்காரர்
தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடை வடக்கு தெருவை சேர்ந்தவர் முனீசுவரன் (வயது 40). இவர் தருவைகுளத்தில் சலூன் கடை வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு தங்கமகராசி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். முனீசுவரன் நேற்று முன்தினம் மதியம் வேப்பலோடை அருகே வே.பாண்டியாபுரத்தில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தருவைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமலட்சுமி, சப்–இன்ஸ்பெக்டர் ராமசுப்பு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தகவல் அறிந்த விளாத்திகுளம் தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர். அவர்கள் கண்மாயில் இறங்கி முனீசுவரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
பிணமாக மீட்பு
நேற்று காலையில் மீண்டும் தீயணைப்பு படையினர் கண்மாயில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் முனீசுவரனை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல், அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்மாயில் மூழ்கி சலூன் கடைக்காரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story