காங்கிரஸ் ஆட்சி அகற்றப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை அன்பழகன் எம்.எல்.ஏ. பேச்சு
காங்கிரஸ் ஆட்சி அகற்றப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று நடந்தது. எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
விழாவில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் நாளாக கொண்டாடப்படுகிறது. அண்ணாவின் மறைவுக்கு பின் கருணாநிதியை முதல்-அமைச்சராக ஆக்கியவர் எம்.ஜி.ஆர்.
ஊழலில் சிக்கி தவித்த தமிழகத்தை காக்க அ.தி.மு.க.வை உருவாக்கி நல்லாட்சியை தமிழகத்துக்கு அளித்தார். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரம் உயர தனது உயிர் உள்ளவரை பாடுபட்டார்.
நிஜ வாழ்க்கையில் வாரி வழங்கிய வள்ளலாக இருந்தார். சினிமாவில் நடித்து சம்பாதித்த சொத்தை மக்களுக்கு தானமாக வழங்கினார். புதுச்சேரியில் ஆட்சியை காங்கிரஸ் கட்சிக்காக விட்டுக்கொடுத்தார். அவரை பின்பற்றி ஜெயலலிதாவும் காங்கிரஸ் ஆட்சி அமைய உதவி செய்தார்.
அதை எல்லாம் மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நன்றி மறந்து செயல்படுகின்றனர். ஜெயலலிதாவின் சிலை வைப்பதற்கும், அவரது நினைவாக அரசு கட்டிடத்திற்கோ, சாலைக்கோ பெயர் வைக்கக்கூட நல்ல எண்ணம் இல்லாதவர்கள் ஆட்சி நடக்கிறது.
அதேபோல் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் வாக்களித்த மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களை வஞ்சிக்கிறது. தமிழகத்தில் 1 கோடியே 90 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பும், ரூ.1000 ரொக்கமும் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சராக பழனிச்சாமி இருக்கிறார்.
ஆனால் புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு சாதாரணமாக ஒரு வீட்டுக்கு ரூ.135 மதிப்புள்ள இலவச பொருட்கள் கூட வழங்குவதற்கு லாயக்கற்ற முதல்-அமைச்சராக நாராயணாமி இருக்கிறார். இந்த அரசு அகற்றப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

Related Tags :
Next Story