காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் கண்ணாடி உடைப்பு: பாகூர் அருகே 2-வது நாளாக பதற்றம்-போலீஸ் நிலையம் முற்றுகை
பாகூர் அருகே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயவேணி எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் 2-வது நாளாக பதற்றம் நீடித்தது. அதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாகூர்,
புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள மணமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயவேணி. இவர் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல். ஏ.வாக உள்ளார். நேற்று முன்தினம் மணமேடு பகுதியில் நடந்த பொங்கல் விழாவில் விஜயவேணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். இந்த விழாவையொட்டி அவருடைய கார் அலங்கரிக்கப்பட்டு கிராமத்தை சுற்றி வந்தது. மணமேடு சாலையில் சென்றபோது அங்கு ரோட்டில் இடையூறாக இருந்த மினிவேனை ஓரமாக நிறுத்துமாறு எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் மணிவண்ணன் கூறினார்.
அப்போது மினி வேனில் இருந்தவர்களுக்கும், மணிவண்ணனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின்போது அப்பகுதியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் குணசீலன் (வயது 48) வீட்டில் இருந்து வந்த நபர்கள் மணிவண்ணனை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் எம்.எல்.ஏ. காரின் பின்பக்க கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதை அறிந்த விஜயவேணி எம்.எல்.ஏ., அவரது கணவர் வெங்கடேசன் மற்றும் ஆதரவார்கள் குணசீலன் வீட்டின் முன்பு திரண்டனர். அதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அதுபற்றி அறிந்ததும் பாகூர் மற்றும் கரையாம்புத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் எம்.எல்.ஏ. தரப்பினர் கார் கண்ணாடியை உடைத்ததாக குணசீலன், சுதர்வாணன், தமிழ்காவலன், தமிழ்குடிமகன் ஆகியோரின் பெயர்களை கூறி, அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் புகார் மனுவாக கொடுத்தால்தான் வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரையாம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் இரவு 8 மணியளவில் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் (பொறுப்பு), பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் எம்.எல்.ஏ. தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களின் சமாதானத்தை எம்.எல்.ஏ. தரப்பினர் ஏற்க மறுத்தனர்.
இந்த நிலையில் இரவு 12 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வந்த அமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் போராட்டத்தில் ஈடுபட்ட விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்களை சமாதானம் செய்தார். அவரிடம் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கார் கண்ணாடியை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கிறார்கள் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதனை அழைத்து, புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் மணிவண்ணன் கரையாம்புத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் மணமேடு பகுதியைச் சேர்ந்த குணசீலன் (52), சுதர்வாணன் (34), தமிழ்க்குடி மகன் (25), தமிழ்க்காவலன் (32) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தமிழ்க்குடிமகன் மற்றும் தமிழ்க்காவலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே குணசீலனின் ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் நேற்றுக்காலை பாகூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். வருகிற 23-ந் தேதி தமிழ்க்குடிமகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரை கைது செய்ததை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் தங்களை தாக்கிய எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கேரியும் அவர்கள் கோஷமிட்டனர்.
அதனால் அங்கு 2-வது நாளாக பரபரப்பும் பதற்றமும் நிலவியது. போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போது, தாக்கியவர்கள் மீது புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story