மாவட்ட செய்திகள்

எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை + "||" + MGR. Respect for the statue

எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.
வாலாஜாபாத்,

வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, ஏகனாம்பேட்டை பகுதிகளில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கும், கருக்குப்பேட்டை, வாலாஜாபாத் பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைகளுக்கும் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


விழாவில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அக்ரி நாகராஜன், மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வரதராஜுலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.கங்காதரன், முன்னாள் தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
2. நினைவு தினத்தையொட்டி அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.
3. பெரம்பலூரில் குடியரசு தின விழா: கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை
பெரம்பலூரில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
4. 102-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளையொட்டி தஞ்சையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
5. முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் மரியாதை
முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு நடிகர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.