மணம்தவிழ்ந்தபுத்தூரில் சக்தி விநாயகர் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


மணம்தவிழ்ந்தபுத்தூரில் சக்தி விநாயகர் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 18 Jan 2019 3:45 AM IST (Updated: 18 Jan 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

மணம்தவிழ்ந்தபுத்தூரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே மணம்தவிழ்ந்தபுத்தூர் மங்காந்தோப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் காணும் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் கரிநாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் சக்தி விநாயகருக்கு பால், தேன், சந்தனம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 7.30 மணிக்கு மூலவர் சக்தி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் மணம்தவிழ்ந்தபுத்தூர், பலாப்பட்டு, ஒறையூர், அம்மாப்பேட்டை, புதுப்பேட்டை, கரும்பூர், ஆனத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தைச்சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவிலை சுற்றி ஏராளமான தற்காலிக கடைகள், பொழுதுபோக்கு விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Next Story