சேலம் அண்ணாபூங்கா மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
சேலம் அண்ணாபூங்கா மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
சேலம்,
எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் நேற்று சேலத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது. சேலம் அண்ணா பூங்காவில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட மணிமண்டபத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
அதன்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் கலெக்டர் ரோகிணி கலந்துகொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அருகில் இருந்த ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சக்திவேல், வெற்றிவேல், ராஜா, மாநகர் பொருளாளர் பங்க் வெங்காடசலம், துணை செயலாளர் பாலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி, பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, தியாகராஜன், சரவணன், கூட்டுறவு சங்க செயலாளர்கள் எம்.துரைராஜ், சுந்தரபாண்டியன், ராமராஜ், செல்வராஜ், பெரியபுதூர் கண்ணன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ், மாமாங்கம் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story