மாவட்ட செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு + "||" + Alanganallur At Jallikattu Festival Electrostatic sudden death

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் எலக்ட்ரீசியன் திடீர் சாவு
அலங்காநல்லூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டை காண வந்த எலக்ட்ரீசியன் மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
அலங்காநல்லூர்,

மதுரை அலங்காநல்லூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவை பார்ப்பதற்காக உள்ளூர், வெளியூர்காரர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அதிகாலையிலேயே குவியத்தொடங்கினர். இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியில் மிகுந்த நெருக்கடி நிலவியது.


கூட்டத்திற்குள் அலங்காநல்லூரை சேர்ந்த பெரியகங்கை (வயது 45) என்பவரும் நின்றிருந்தார். ஜல்லிக்கட்டு தொடங்கிய சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பெரியகங்கை பரிதாபமாக இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காண நின்றிருந்தவர் திடீரென இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆசிரியரின் தேர்வுகள்...