சாத்தான்குளம் அருகே தந்தை–மகனுக்கு கத்திக்குத்து 4 பேருக்கு வலைவீச்சு
சாத்தான்குளம் அருகே தந்தை–மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் அருகே தந்தை–மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கத்திக்குத்துதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீரான்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வரமணி சாமுவேல் (வயது 60). விவசாயி. இவருடைய மகன் ஜோசப்புக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது திருமண அழைப்பிதழில் தாய்மாமனான அப்பகுதியைச் சேர்ந்த சாமுவேலின் பெயரை அச்சிடவில்லை.
இதுதொடர்பாக சாமுவேலின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் வரமணி சாமுவேலின் குடும்பத்தினரிடம் சென்று கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது ஆத்திரம் அடைந்த சாமுவேல் மகன் சதீஷ் கத்தியால் வரமணி சாமுவேல், அவருடைய மகன் யாக்கோபு ராஜ் (34) ஆகிய 2 பேரையும் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
4 பேருக்கு வலைவீச்சுஇதில் படுகாயம் அடைந்த வரமணி சாமுவேல், யாக்கோபு ராஜ் ஆகிய 2 பேருக்கும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சதீஷ், அவருடைய தந்தை சாமுவேல், தாய் கனி, உறவினரான கோபால் மகன் கண்ணன் ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.