சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம் இறந்தும், பிறருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளதாக தாயார் பேட்டி
சாலைவிபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. தனது மகன் இறந்தும் பிறருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளதாக தாயார் தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் அலமேலுமங்காபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். இவரது மனைவி மேரிலதா. இவர் கணியம்பாடியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகன் கரோல்ரோஜர் (வயது 18), சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்தார்.
கடந்த 16-ந் தேதி காட்பாடி -திருவலம் சாலையில் நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் நேற்று முன்தினம் நள்ளிரவு கரோல்ரோஜர் மூளைச்சாவு அடைந்தார். அதை மருத்துவகுழுவினர் உறுதி செய்தனர்.
இதையடுத்து குடும்பத்தினர் கரோல்ரோஜரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்பேரில் டாக்டர்கள் குழுவினர் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கரோல்ரோஜரின் உடலில் இருந்து நுரையீரல், 2 சிறுநீரகம் ஆகியவற்றை பிரித்தெடுத்தனர்.
அதில் நுரையீரல், ஒரு சிறுநீரகம் சி.எம்.சி.மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. சிறுநீரகம் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து அவரின் தாயார் மேரிலதா கூறுகையில், “எனது மகன் மறைந்தும், அவனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பிறருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளான். அவனின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் மறைந்தும் இந்த உலகில் பிறருக்கு பயன் உள்ளதாக மாறி உள்ளான்” என்றார்.

Related Tags :
Next Story