கூலமேடு ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷ காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள் - மாடு முட்டியதில் 30 பேர் காயம்
ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த ஆக்ரோஷ காளைகளுடன் காளையர்கள் மல்லுக்கட்டினர். அப்போது, மாடுகள் முட்டியதில் 30 பேர் காயம் அடைந்தனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேடு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஜல்லிக்கட்டு விழா நேற்று கூலமேட்டில் கோலாகலமாக நடந்தது. இதற்காக கூலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மைதானம் தயார் செய்யப்பட்டிருந்தது. சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளை போட்டியில் பங்கேற்பதற்காக மாட்டு உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்து பதிவு செய்தனர்.
அந்த மாடுகளுக்கு நோய் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், நோய் உள்ளிட்ட சில குறைபாடுகள் காரணமாக சில காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்றும், இதனால் அந்த காளைகளை தங்களது ஊர்களுக்கு அழைத்து செல்லுமாறும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் 519 காளைகள் மட்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதாக விழா குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதேபோல், மாடுபிடி வீரர்களில் 350 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படாத வகையில் மைதானத்தில் தென்னைநார் கழிவுகள் பரப்பப்பட்டும், பார்வையாளர்கள் கூட்டத்துக்குள் காளைகள் சென்று விடாமல் இருக்க பாதுகாப்பு தடுப்பு கம்பி வலைகள் கட்டப்பட்டிருந்தன.
மேலும், காளைகள் களத்துக்கு செல்வதற்கு வசதியாகவும், இதை பார்க்க பார்வையாளர்களுக்கு வசதியாகவும் இரண்டு அடுக்கு தடுப்புவேலி அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து சரியாக காலை 9.15 மணிக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி, போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர், ஜல்லிக்கட்டு விழாவை கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக கோவில் காளை முதலில் அவிழ்த்துவிடப்பட்டது. முதலில் வந்த கோவில் காளையை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து, மற்ற காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறி பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஆனால் காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்காமல் திமிறிக்கொண்டு ஓடின. சில இளைஞர்கள் காளைகளின் திமிலை பிடித்துக்கொண்டு சற்று தூரம் சென்றனர்.
மேலும், சில காளைகள் துள்ளிக் குதித்தபடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு ஆக்ரோஷமாக ஓடியது. ஒவ்வொரு காளையும் களத்துக்கு வரும்முன், “ஒலி பெருக்கி மூலம் இந்த காளையை அடக்கினால் தங்ககாசு, வெள்ளிகாசு, குத்துவிளக்கு, சில்வர் பேஷன், செல்போன், சைக்கிள், ரொக்கப்பணம், பாத்திரங்கள், குத்துவிளக்கு, அரிசி சிப்பம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்” என்றும், “2-க்கும் மேற்பட்ட வீரர்கள் சேர்ந்து காளைகளை பிடித்தால் அவர்களுக்கு பரிசு கிடையாது” என்றும் அறிவிக்கப்பட்டது.
பரிசுகளை வெல்ல வேண்டும் என்ற துடிப்புடன் மாடுபிடி வீரர்கள் காளைகளை பிடிக்க முயன்றனர். ஆனால், காளைகள் திமிறிக்கொண்டு யாருக்கும் பிடிகொடுக்காமல் சென்றதையும், இதனால் மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முடியாமல் திணறியதையும் காணமுடிந்தது. இருப்பினும், திமிறி கொண்டு துள்ளி குதித்த சில காளைகளை, அங்கிருந்த காளையர்கள் சிலர் மல்லுக்கட்டி மடக்கி பிடித்ததற்காகவும், வீரர்கள் பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்துவிளக்கு, குக்கர், மிக்சி, மின்விசிறி போன்ற பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில், ஆத்தூர் அருகே ஒட்டப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் கோபாலகிருஷ்ணன் (வயது 20), பெரம்பலூரை சேர்ந்த அஜித் (21), நாமக்கல்லை சேர்ந்த கோகுல் (22), சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த தினேஷ்குமார் (22), பிரபாகரன் (24), செந்தாரப்பட்டி கஸ்தூரி (42), வீரகனூர் சதீஷ்குமார் (23) உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.
பின்னர், லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் படுகாயம் அடைந்த வீரர்களை மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, பார்வையாளர்கள் சிலரையும் காளைகள் முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த உளிபுரத்தை சேர்ந்த ரவி (50), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி (40) ஆகியோர் உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கூலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, கடம்பூர், நாமக்கல், தர்மபுரி உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ரசித்து பார்த்தனர்.
காலை 9.15 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சின்னதம்பி, மருதமுத்து, முன்னாள் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறந்த காளைகளுக்கு சைக்கிள், பிரிட்ஜ் பரிசு
கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டாலும், வாடிவாசல் வழியாக ஒருசில காளைகள் மட்டுமே துள்ளி குதித்து ஆக்ரோஷமாகவும், வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் களத்தில் நின்று விளையாடியது. அந்த காளைகளை வீரர்கள் யாராலும் அடக்க முடியவில்லை. இதனால் காளைகளுடன் அவர்கள் மல்லுகட்டும் போது பார்வையாளர்கள் தங்களது கைகளை தட்டியும், விசில் அடித்தும் உற்சாகப்படுத்தியதை காணமுடிந்தது. முடிவில், சிறந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதாவது, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் கார்த்திக் மற்றும் ஆத்தூர் அருகே சீலியம்பட்டியை சேர்ந்த செந்தில் ஆகிய இருவருடைய காளைகள் சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், கூலமேடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய காளைக்கு பிரிட்ஜ் வழங்கப்பட்டது. இதுதவிர, வாடிவாசல் வழியாக துள்ளி குதித்து வந்த காளைகளை அதன் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கு உடனுக்குடன் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story