‘உதான்’ திட்டத்தின் கீழ் 5 வழித்தடங்களில் உள்ளூர் விமான சேவை
உள்ளூர் விமான சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்க உருவாக்கப்பட்டது தான் ‘உதான்’ திட்டம்.
மும்பை,
‘உதான்’ திட்டத்தின் கீழ் மராட்டிய மாநிலத்தில் 5 வழித்தடங்களில் விமான சேவையை தொடங்க உள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி மும்பை-நாசிக், மும்பை-ஜல்காவ், மும்பை-கோலாப்பூர் மும்பை- சோலாப்பூர் மற்றும் நாசிக்-புனே இடையே அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி முதல் விமான சேவை தொடங்க உள்ளது.
ஏற்கனவே இந்த வழித்தடங்களில் முன்பு விமான சேவை இருந்தது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல கூடிய விரைவில் நாசிக்- பிரயக்ராஜ் மற்றும் நாசிக்- ஐதராபாத் இடையேயும் விமான சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story