ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்


ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 19 Jan 2019 11:15 PM GMT (Updated: 19 Jan 2019 3:54 PM GMT)

ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மண்டல மகளிர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கிருஷ்ணவேணி ஜெலந்தர் தலைமை தாங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் பாத்திமாரோஸ்னா, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, ராஜீவ்காந்தி நினைவக பொறுப்பாளர் முருகானந்தம், விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க அனைவரும் பாடுபட வேண்டும், மகளிர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பெட்ரோல்–டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மகளிர் காங்கிரஸ் மாநில இணை செயலாளர்கள் ரீட்டா, வனமயில், மாநில செயலாளர் வனிதாமகேந்திரன், கடலூர் மாவட்ட தலைவர்கள் கரோலின், கலைச்செல்வி, விழுப்புரம் நகர காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், மாநில வக்கீல் பிரிவு பிரிவு துணைத்தலைவர் ராஜாராம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராம், துணைத்தலைவர் ராஜமாணிக்கம், ஊடக பிரிவு தலைவர் மதியழகன், மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் வசந்தாகாசிநாதன், ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் பிரியங்கா நன்றி கூறினார்.


Next Story