நாமக்கல்லில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தகோரி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் நேற்று விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல்,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது வினியோக திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர்கள் சங்க மூத்த தலைவர் செங்கோடன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் ஆறுமுகம், விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலகுழு உறுப்பினர் சம்பூரணம், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி விலையை தீர்மானிக்க வேண்டும். ஏழை விவசாயி மற்றும் விவசாய தொழிலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.முன்னதாக தியாகிகள் தினத்தை முன்னிட்டு உழைப்பாளி மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் தங்களது உயிரை இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story