காளை விடும் விழா நடக்கும் ஊர்களில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் உதவி கலெக்டர் உத்தரவு
காளை விடும் திருவிழா நடக்கும்போது சம்பந்தப்பட்ட கிராமங்களில் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட உதவி கலெக்டர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் காளை விடும் திருவிழா பல்வேறு கிராமங்களில் களை கட்டி வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் இந்த போட்டிக்காக பல மாதங்களுக்கு முன்பே காளையின் உரிமையாளர்கள் தங்களின் காளைகளை தயார் படுத்தி வருகின்றனர். குறைந்த நேரத்தில் அதிவேகமாக இலக்கை அடையும் காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இந்த விழா நடைபெறும் கிராமமே இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காளைகளும், இளைஞர்களும் அந்த கிராமத்துக்கு படையெடுப்பார்கள்.
விழாவில் அவிழ்த்துவிடப்படும் காளைகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள், சீறிப்பாய்ந்து வரும் காளையின் வேகத்தை கண்டவுடன் விலகி ஓடுவார்கள். பாய்ந்தோடும் காளையை இளைஞர்கள் தங்கள் கைகளால் தட்டி உற்சாகப்படுத்துவார்கள். விழாவை காணவரும் இளைஞர்கள் மதுஅருந்தி வருவதால் வீண் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறு இருதரப்பு மோதலாகவும் மாறும் நிலை உள்ளது.
மேலும் தன்னிலை மறந்தும், காளையோடு மல்லுக்கட்டி எதிரே நிற்கும் குடிமகன்கள் காளையின் கொம்புகளுக்கு பலியாகும் நிலையும் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், மதுவால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க வேலூர் கோட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் காளை விடும் விழா நடத்தப்படும்போது 5 கிலோ மீட்டர் தூர சுற்றளவுக்குள் உள்ள டாஸ்மாக்கடைகளை மூடுவதற்கு வேலூர் உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழா தொடங்கியதிலிருந்து மூடப்படும் கடைகள் விழா முடிந்தபின்னர்தான் திறக்கப்பட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆணைகளை அவர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ளார்.

Related Tags :
Next Story