நாகூர் அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 330 லிட்டர் சாராயம் பறிமுதல் தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு


நாகூர் அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 330 லிட்டர் சாராயம் பறிமுதல் தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Jan 2019 4:30 AM IST (Updated: 20 Jan 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த 330 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

நாகூர்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் படியும் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நாகூர் வெட்டாற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் நாகையை நோக்கி 3 பேர் சென்றனர். அந்த 3 பேரும் போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிள்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் இருந்த மூட்டைகளை போலீசார் சோதனை செய்தனர். இதில் 330 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது. இந்த சாராயத்தை காரைக்காலில் இருந்து கடத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து 330 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story