தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டங்கள்
தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒ.எம். மங்கலம். சிவபுரம், கப்பங்கோட்டூர், அக்கமாபுரம், எடையார்பாக்கம், துளசாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒ.எம். மங்கலம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட பிரதிநிதி வேலுமணி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சிவபாதம் முன்னிலை வகித்தார்.
இதில் மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். இதில் ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை, காஞ்சீபுரம் மாவட்ட துணை அமைப்பாளர் பொடவூர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, காரணைப்புதுச்சேரி, கீரப்பாக்கம், குமிழி, கல்வாய், ஊரப்பாக்கம் போன்ற ஊராட்சியில் உள்ள கிராமங்களில் நேற்று தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.கே.தண்டபாணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.எஸ்.ரவி, பத்மநாபன், ஸ்ரீராமன், தமிழ்செல்வம், தயாளன், ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் சுப்பிரமணி, மேகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story