தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை
கடனை தள்ளுபடி செய்யக்கோரி தஞ்சையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் சி.ஐ.டி.யூ., தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர்கள் ஜெயபால், கண்ணன், மாவட்ட தலைவர் வாசு ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட தலைவர்கள் கோவிந்தராஜூ, செந்தில் குமார், மாவட்ட துணைச் செயலாளர் அபிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மின் ஊழியர் மத்தியஅமைப்பு பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். பொதுவினியோக திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். விவசாய விலை பொருட்களுக்கு சாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து ஏழை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை நகர பகுதிகளுக்கு விரிவுப்படுத்தி ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் நிர்வாகிகள் முகமதுஅலி, சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் 1982-ம் ஆண்டு நடந்த நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Tags :
Next Story