மாவட்ட செய்திகள்

கடலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Bank staff demonstrated

கடலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர்,

இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் கடலூர் மண்டலம் சார்பில் கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல ஆலோசகர் சுப்புராமன் தலைமை தாங்கினார். செயலாளர் அரிய செல்வம் முன்னிலை வகித்தார். கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஓய்வுபெற்ற ஊழியர்சங்க செயலாளர் மருதவாணன் நிறைவுரை£யாற்றினார்.

சட்டப்படியான ஊதிய உயர்வு, போனஸ் வழங்க வேண்டும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கி ஊழியர்கள் மீது வேலைப்பளுவை சுமத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் புருஷோத்தன், மாவட்ட தலைவர் மனோகர், பி.எஸ்.என்.எல். ஓய்வுபெற்றோர் சங்கம் மாவட்ட செயலாளர் மதியழகன், அரசு ஊழியர் சங்க மாவட்டசெயலாளர் அரிகிருஷ்ணன், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பால்கி, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்மபந்தம், வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் ஸ்ரீதர், முஜீப் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இந்தியன் வங்கியின் தற்காலிக ஊழியர் நடராஜன் நன்றி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
3. கிராமப்பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை; விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரியும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
4. தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது
தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை
திருநாகேஸ்வரம் ராகு கோவிலுக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

அதிகம் வாசிக்கப்பட்டவை