தங்கச்சிமடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பு


தங்கச்சிமடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பு
x
தினத்தந்தி 21 Jan 2019 4:00 AM IST (Updated: 20 Jan 2019 8:01 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தலா ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் செலவில் 2 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தங்கச்சிமடம் தர்கா பஸ் நிறுத்தம் மற்றும் வலசை தெரு ஆகிய இடங்களில் தலா ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் செலவில் 2 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அன்வர்ராஜா எம்.பி. கலந்து கொண்டு உயர்கோபுர மின் விளக்குகளை தொடங்கி வைத்து பேசியதாவது:–

 தமிழ்நாட்டில் உரிமைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். மேகதாது அணை கட்டக்கூடாது எனவும், மத்திய அரசின் முத்தலாக் சட்டத்துக்கு எதிராகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மதுரை–பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனை தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை விரிவுபடுத்துவதற்கு முயற்சி எடுத்துள்ளோம். விரைவில் அது செயல்படுத்தப்படும். பாம்பன் ரோடு பாலம் அருகே புதிதாக 2 நான்கு வழிப்பாலங்கள் கட்டப்பட உள்ளன. ஜெர்மன் தொழில்நுட்ப அதிகாரிகளை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story