2–வது நாளாக 10 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்


2–வது நாளாக 10 இடங்களில் கஞ்சித்தொட்டி திறப்பு பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:45 AM IST (Updated: 20 Jan 2019 8:01 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டம் முழுவதும் 2–வது நாளாக பட்டாசு தொழிலாளர்கள் ஆலைகளை திறக்கக்கோரியும் நிவாரணம் வழங்கக்கோரியும் 10 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கும் மேல் மூடப்பட்டுள்ள நிலையில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும் நிவாரணம் வழங்கக்கோரியும் பட்டாசு தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர். 2–வது நாளாக நேற்று 10 இடங்களில் கஞ்சித்தொட்டிகளை திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வச்சக்காரப்பட்டி, பொம்மையாபுரம், இனாம்ரெட்டியபட்டி, வெள்ளூர், வல்லம்பட்டி, சிவகாசி, நாரணாபுரம், ஆலாவூரணி, கோணம்பட்டி, முத்தால்நாயக்கன்பட்டி ஆகிய 10 இடங்களில் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன. இதில் 500–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story