பன்றி காய்ச்சலுக்கு போலீஸ்காரர் சாவு


பன்றி காய்ச்சலுக்கு போலீஸ்காரர் சாவு
x
தினத்தந்தி 21 Jan 2019 4:15 AM IST (Updated: 21 Jan 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்ற போலீஸ்காரர் பரிதாபமாக இறந்துபோனார்.

வானூர்,

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கண்டமங்கலம் பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 32). இவர் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்கு தீவிர சிகிச்சைப்பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பன்றிகாய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உதயகுமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

பன்றி காய்ச்சலுக்கு போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையை யொட்டி உள்ள ஆரோவில் பகுதியில் இந்த காய்ச்சல் பரவி உள்ளதா? என சுகாதார துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சுகாதார முறைப்படி மருந்து தெளித்த பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

Next Story