மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் அமைச்சர் நமச்சிவாயம் நம்பிக்கை
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கவர்னர் மாற்றப்படுவார். மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்களின் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நம்பிக்கை தெரிவித்தார்.
வில்லியனூர்,
வில்லியனூர் வட்டார காங்கிரஸ் சார்பில், நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. வட்டார காங்கிரஸ் தலைவர் அயூப் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-
புதுச்சேரியில் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தடங்கல்கள் இருந்தாலும் வில்லியனூர் தொகுதி மக்களுக்கு பட்டா, முதியோர் உதவித்தொகை வழங்குதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றோம்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் அதற்கான வேட்பாளரை தேர்தலுக்கு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதற்கான வேட்பாளர் பட்டியலை வருகிற 30-ந் தேதிக்குள் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். தொகுதி வாரியாக உள்ள பூத் மற்றும் ஏஜெண்டு பட்டியல் 25-ந் தேதிக்குள் தயார் செய்து தேர்தல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
எனவே தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் இதற்கான முயற்சியில் துடிப்புடன் செயல்பட வேண்டும். பிரதமர் மோடி ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டு அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் ராகுல்காந்தியை வெற்றி பெற செய்து பிரதமராக்க வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் புதுச்சேரி கவர்னர் மாற்றப்படுவார். பிறகு 2 ஆண்டில் மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு, பட்டா உள்ளிட்ட அனைத்து பொதுமக்கள் திட்டங்களும் நிறைவேற்றப் படும். அப்போதுதான் புதுச்சேரி வளர்ச்சி அடையும்.
மேலும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் விவரங்களை கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்திருக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதற்கு சக்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக மொபைல் எண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணுக்கு கட்சி தொண்டர்கள் வாக்காளர் அட்டையின் எண்ணை எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். தொண்டர்களின் விருப்பப்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அனைத்து மாநிலத்திலும் இதற்கான செயல்பாடுகள் துவங்கி செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களை சக்தி திட்டத்தில் இணைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், பொது செயலாளர் கண்ணபிரான், வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், உறுப்பினர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் சக்தி திட்டம் தொடக்க விழா மதகடிப்பட்டில் நடைபெற்றது. தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் தனுசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். தொகுதி வட்டார காங்கிரஸ் பொதுச்செயலாளர் வெங்கடேசன், அவைத்தலைவர் ஞானசுந்தரம், புதுச்சேரி மாநில பஞ்சாயத்துராஜ் தலைவர் துளசிங்க பெருமாள், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சி நிதி வசூல் செய்ய நன்கொடை புத்தகம் வழங்குவது, நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சக்தி திட்டத்தின் பயன்பாடுகள் குறித்த செயல்பாடுகளை பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துகளை சேகரிப்பது குறித்து பேசினார்கள். சக்தி திட்ட உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story