மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு + "||" + Counterfeit love Son daughter killed The death sentence of court order

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்- மகள் கொலை: சமையல்காரருக்கு மரண தண்டனை குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன்-மகளை கொலை செய்த வழக்கில், சமையல்காரருக்கு மரண தண்டனை விதித்து குந்தாப்புரா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மங்களூரு,

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா பைந்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கங்கநாடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் நாராயண ஹெப்பார்(வயது 49). சமையல்காரரான இவருக்கு திருமணம் ஆகி மகாலட்சுமி என்ற மனைவியும், அஸ்வின்குமார்(16), ஐஸ்வர்யலட்சுமி(14) என்ற மகளும் இருந்தனர்.


இந்த நிலையில் சங்கர் நாராயண ஹெப்பாருக்கும், சமையல் வேலைக்கு வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர். இதுபற்றி மகாலட்சுமிக்கு தெரிய வந்து உள்ளது. அவர் சங்கர் நாராயண ஹெப்பாரை கண்டித்து உள்ளார். ஆனாலும் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதுதொடர்பாக சங்கர் நாராயண ஹெப்பாருக்கும், மகாலட்சுமிக்கும் இடையே அடிக்கடி சண்டை உண்டானது.

இந்த நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து மகாலட்சுமி, மகன் அஸ்வின்குமார், மகள் ஐஸ்வர்யலட்சுமி ஆகிய 3 பேரையும் கொலை செய்ய சங்கர் நாராயண ஹெப்பார் முடிவு செய்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று குளிர்பானத்தில் விஷத்தை கலந்து மகாலட்சுமி, அஸ்வின்குமார், ஐஸ்வர்யலட்சுமி ஆகிய 3 பேருக்கும் சங்கர் நாராயண ஹெப்பார் கொடுத்து உள்ளார்.

குளிர்பானத்தை குடித்து அவர்கள் 3 பேரும் மயங்கி விழுந்து உள்ளனர். மேலும் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்று அக்கம்பக்கத்திரை நம்ப வைப்பதற்காக சங்கர் நாராயண ஹெப்பாரும் விஷம் கலந்த குளிர்பானத்தை கொஞ்சம் குடித்து மயங்கி விழுந்தார்.

இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குந்தாப்புரா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அஸ்வின்குமாரும், ஐஸ்வர்யலட்சுமியும் இறந்தனர். மகாலட்சுமியும், சங்கர் நாராயண ஹெப்பாரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

இதுகுறித்து பைந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகன், மகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து சங்கர் நாராயண ஹெப்பார் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சங்கர் நாராயண ஹெப்பாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந் தேதி நடந்தது.

கைதான சங்கர் நாராயண ஹெப்பார் மீது போலீசார், குந்தாப்புரா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நீதிபதி பிரகாஷ் கண்டேரி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் நாராயண ஹெப்பாருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன், மகளை கொன்ற சமையல்காரருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதால் குந்தாப்புரா கோர்ட்டு வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை; மகன் - மருமகள் கைது
கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனையும்-மருமகளையும் போலீசார் கைது செய்தனர்.
2. போலீஸ்காரரை கண்டித்து, மகனுடன் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி - பண்ருட்டியில் பரபரப்பு
பண்ருட்டியில் போலீஸ்காரரை கண்டித்து ஆட்டோ டிரைவர் மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
3. என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை - பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்
என்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
4. ப.சிதம்பரம் மனைவி, மகனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்: வருமான வரித்துறை மனு மீது பதிலளிக்க உத்தரவு
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்பு பணம் தடுப்பு வழக்கில் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
5. சென்னை வளசரவாக்கத்தில் மகன், மகளை கொன்று இளம்பெண் தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகன் மற்றும் மகளை கொன்றுவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.