ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிசை எரிந்து நாசம் பழனி எம்.எல்.ஏ. ஆறுதல்


ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிசை எரிந்து நாசம் பழனி எம்.எல்.ஏ. ஆறுதல்
x
தினத்தந்தி 22 Jan 2019 4:15 AM IST (Updated: 21 Jan 2019 9:33 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூர் அருகே விவசாயியின் குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பொருட்கள் நாசமாயின. பழனி எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குண்டுப்பெரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). இவர் விவசாயம் செய்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு குடும்பத்துடன் தனது குடிசை வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை தீடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட லோகநாதன் அலறியடித்து கொண்டு குடும்பத்தினருடன் அனைவரையும் எழுப்பி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

உடனே தீணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த குழந்தைகளின் பள்ளி சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள், வீட்டுப் பொருட்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின.

இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி நேரில் வந்து தீ விபத்து ஏற்பட்ட வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் ரூ.5 ஆயிரம் உதவியும், அரசு சார்பில் அரிசி, வேட்டி, சேலை, நிவாரண தொகை ஆகியவற்றையும் வழங்கினார்.

அப்போது தாசில்தார் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில்ராஜன், உள்ளிட்டோர் இருந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story