தஞ்சை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 8 ஆயிரம் பேர் வேலைநிறுத்தம் 9 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடந்தது
தஞ்சை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 8 ஆயிரம் பேர் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 9 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1-4-2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர் களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிட வேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 66 அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 6 ஆயிரத்து 56 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. இது 56 சதவீதம் ஆகும். அரசு ஊழியர்கள் மொத்தம் 16 ஆயிரத்து 580 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 1,962 பேர் பணிக்கு வரவில்லை. இதில் வருவாய்த்துறையில் 1420 பேரில் 874 பேர் பணிக்கு வரவில்லை. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் 1245 பேரில் 245 பேர் பணிக்கு வரவில்லை. 3876 சத்துணவு பணியாளர்களில் 671 பேர் பணிக்கு வரவில்லை. 2966 அங்கன்வாடி பணியாளர்களில் 24 பேர் பணிக்கு வரவில்லை. மற்ற துறை பணியாளர்கள் 7632 பேரில் 182 பேர் பணிக்கு வரவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 480 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 8 ஆயிரத்து 18 பேர் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இது 29 சதவீதம் ஆகும். ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பல பள்ளிகளில் ஒரு அல்லது இரண்டு ஆசிரியர்களுடன் மட்டுமே இயங்கியது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தஞ்சை பனகல் கட்டிடம் உள்பட மாவட்டத்தில் 9 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரத்து 53 பெண்கள் உள்பட 3,500 பேர் கலந்து கொண்டனர்.
தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்க நிலை ஆசிரியர் சங்க தொடர்பாளர் ரகு, அரசு ஊழியர் சங்க தொடர்பாளர் பாஸ்கர், உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆசிரியர் சங்க தொடர்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. அலுவலகம் முன்பும், தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Tags :
Next Story