திருச்சியில் முன்னாள் படை வீரர்கள் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
திருச்சி,
அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான சுகாதார திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். சி.எஸ்.டி. கேன்டீன் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் காசிமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி அகில இந்திய துணைத்தலைவர் சீனிவாசன் பேசினார். உண்ணாவிரத போராட்டத்தில் நிர்வாகிகள் மணி, பாஸ்கரன், ராஜசேகரன், மகாராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story