தம்பதியிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண்


தம்பதியிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:30 AM IST (Updated: 23 Jan 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

கழகுமலை அருகே தம்பதியிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் தூத்துக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

தூத்துக்குடி,

கோவில்பட்டி அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 25). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 9-ந் தேதி தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் குழந்தையுடன் முக்கூட்டு மலை அருகே உள்ள அச்சம் தவிர்த்தான் கிராமத்துக்கு சென்று விட்டு இரவில், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அவர் முக்கூட்டு மலை அருகே வந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் 3 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்கள் ரமேஷின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து, முத்துலட்சுமி அணிந்து இருந்த 3½ பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வழக்கில் தேடப்பட்டு வந்த கழுகுமலை வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பிரேம்குமார்(வயது 28), மாடசாமி மகன் பாலாஜி(23) ஆகியோர் நேற்று தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை உத்தரவிட்டார். 

Next Story