ஜாக்டோ–ஜியோவினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ஜாக்டோ–ஜியோவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2019 4:45 AM IST (Updated: 23 Jan 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ–ஜியோவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்குடி,

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 20 அமைப்புகளைச் சேர்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களை பறிக்கிற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.– யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். தொடக்கப் பள்ளிகளை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை இணைப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த நாச்சியப்பன், பழனியப்பன், சுப்ரமணியன் ஜெயக்குமார், ரமேஷ், ராமநாதன் சிவகுமார், ரெங்கசாமி, டேவிட் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த போராட்டத்தால் 30 சதவீதத்தினர் மட்டும் வேலைக்கு சென்றதாகவும், மீதமுள்ளவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இன்று (புதன்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், மறியல் போராட்டங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்புத்தூரில் அண்ணாசிலையருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். முத்துமாரிப்பன், மீனாட்சிசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துப்பாண்டி அனைவரையும் வரவேற்றார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் இளங்கோவன் மாவட்ட உயர்மட்டக்குழு உறு?ப்பினர் சிங்கராயர், பழனியப்பன், கருப்பையா, ஜெகன், மகாலிங்கஜெயகாந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திருப்புத்தூரில் அண்ணாசிலையருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். முத்துமாரிப்பன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துப்பாண்டி அனைவரையும் வரவேற்றார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் இளங்கோவன் மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர் சிங்கராயர், பழனியப்பன், கருப்பையா, ஜெகன், மகாலிங்கம், ஜெயகாந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 250–க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரிய–ஆசிரியைகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை, கண்ணங்குடி வட்டாரங்களில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்றது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அழகப்பன், அதிசயராஜ், நாகராஜன், சேவுகமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் மாநில உயர்மட்டக்குழு நாகேந்திரன் சிறப்புரையாற்றினார்.

இளையான்குடியில் தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தோனிசாமி, டேவிட் அற்புதம் ஆகியோர் தலைமை தாங்கினர். சேதுசெல்வம், ஜோசப், சேவியர் சிறப்புரையாற்றினர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சங்க பிரதிநிதிகள் ஆகியோர் திரளாக கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்புகுழு செய்திருந்தனர்.


Next Story