ராமேசுவரத்தில் பாதுகாப்பு ஒத்திகை
ராமேசுவரத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
ராமேசுவரம்,
மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பின்பு நாடு முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் போலீசாரை உஷார்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சி விஜில்-19 என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணி முதல் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி வரை 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஒத்திகையில் பயங்கரவாதிகள் போல் வேடமிட்டு வருபவர்களை பிடிப்பதே இலக்காகும்.
இதன்படி பாதுகாப்பு ஒத்திகை ராமேசுவரத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி கோவிலில் வழக்கத்தை விட கூடுதலாக போலீசார் பாதுகாப்பில் ஈடு படுத்தப்பட்டனர். கோவிலின் கிழக்கு, மேற்கு வாசல் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களையும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர்.
குறிப்பாக இளைஞர்கள், வடமாநிலத்தை சேர்ந்தவர்களை போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இதேபோல ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரை, பாம்பன் ரெயில் மற்றும் ரோடு பாலங்கள், தனுஷ்கோடி கடற்கரை, ரெயில் நிலையம் உள்பட மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் கடலோர போலீசார், கியூ பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தங்கச்சிமடம், சூசையப்பர்பட்டினம் கடற்கரையில் கடலோர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ தை-மையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்து கொண்டிருந்த 7 பேரை பிடித்து சோதனை நடத்தினர். அதில் அவர்களிடம் டம்மி வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகள் இருந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் ராமேசுவரம் கோவில், டி.வி. டவர், பாம்பன் ரெயில் பாலம் உள்ளிட்ட பல இடங்களில் வெடிகுண்டு வைக்க வந்தவர்கள் என்பதும், இவர்கள் சென்னையில் உள்ள கடற்படை கமாண்டோக்கள் என்பதும், இந்த பாதுகாப்பு ஒத்திகைக்காக பயங்கரவாதிகள் போல் வேடமிட்டு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதேபோல ராமேசுவரம் கோவில் அருகே திட்டக்குடி சாலையில் சுற்றிக்கொண்டிருந்த 4 பேரை கடலோர போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் டம்மி வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வெடிகுண்டுகளை கடலோர போலீசார் பறிமுதல் செய்ததுடன் அவர்கள் 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ராமேசுவரம் ரெயில் நிலையம், தனுஷ்கோடி பகுதியில் தாக்குதல் நடத்த வந்தவர்கள் என்பதும், இந்த 4 பேரும் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் உள்ள கடற்படை வீரர்கள் என்பதும் தெரியவந்தது. இவ்வாறு நேற்று நடைபெற்ற சோதனையில் ராமேசுவரத்தில் 11 பேர் பிடிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story